கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் சிவசேனாவுக்கும் இடையே சர்ச்சைகள் நீண்டு கொண்டிருக்கும் நிலையில் சிவசேனாவை கண்டித்து கேரள மாணவர்கள் கிஸ் செய்யும் போராடம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த மாதம் ‘காதலர் தினத்தன்று மரைன் டிரைவ் பகுதியில் உள்ள பூங்காவில் சிவசேனா கொடியுடன் வந்த சிவசேனா அமைப்பைச் சேர்ந்தவர்கள் காதல் ஜோடிகளை அடித்து விரட்டினர். இந்த சம்பவத்தை போலீஸ் வேடிக்கை பார்த்தது. இதனால் போலீஸார்களை முதல்வர் கண்டித்தார்
இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், சிவசேனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கேரளாவில் மாணவர்கள் பொது இடத்தில் உதட்டுடன் உதடு கொடுக்கும் லிப் கிஸ் போராட்டம் நடத்தினர். ஆண்களும் பெண்களும் நடு ரோட்டில் ஒருவரை ஒருவர் கிஸ் அடித்து கொண்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.