பிரபல ரிவி தொகுப்பாளினியான பிரியங்கா இரண்டாவது திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள், காணொளிகள் வைரலாகி வருகின்றது.
தொகுப்பாளினி பிரியங்கா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக வலம் வரும் பிரியங்கா. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இன்னும் பிரபலமானார்.
கர்நாடகாவைச் சேர்ந்த இவர் பிரவீன் என்பவரைக் காதலித்து 2016ம் ஆண்டு திருமணம் செய்தார். பின்பு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்ததாகவும், 2022ம் ஆண்டு விவாகரத்து ஆகிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
எப்பொழுதும் மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும் பிரியங்காவின் தனிப்பட்ட வாழ்க்கை சரியாக இல்லாமல் இருந்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியிருந்தது.
இந்நிலையில் பிரியங்காவின் இரண்டாவது திருமணத்தின் புகைப்படம் மற்றும் காணொளி வைரலாகி வருகின்றது. ஆம் வசி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளாராம்.
ஆனால் இவரைக் குறித்த மற்ற விபரங்கள் வெளியாகாத நிலையில், குறித்த காணொளியினை அவதானித்த ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.