ஜோதிட சாஸ்திரத்தில் புதன் பெயர்ச்சி ஒவ்வொரு ராசிக்கும் முக்கியம் பெறுகின்றது. ஏனென்றால் புதன் புத்திக்கூர்மை மற்றும் வணிகத்தின் கிரகமாக கருதப்படுகிறார்.
இதனால் இவரின் இந்த இரட்டை பெயர்ச்சி எல்லா ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஜோதிடத்தில் புதன் கிரகம் வணிகம், பகுப்பாய்வு திறன் மற்றும் நல்ல தகவல்தொடர்பு ஆகியவற்றைக் குறிப்பது புதன் கிரமாக கருதப்படுகின்றது.
மே மாதத்தில், கிரகங்களின் இளவரசரான புதன் இரண்டு முறை பெயர்ச்சி அடைகிறார். முதலாவதாக, மே 07, 2025 அன்று, புதன் மேஷ ராசியிலும், மே 23, 2025 அன்று, ரிஷப ராசியிலும் சஞ்சாரம் செய்கிறார்.
இதனால் எந்த ராசிகளுக்கு என்ன நன்மை என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மே மாதத்தில் நடக்கும் இரட்டை புதன் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை அளிக்கும்.
எல்லாவற்றிலும் நன்மை கிடைக்கும்.
செல்வம் பன்மடங்கு அதிகரிக்கும்.
வேலையில் சரியான முடிவுகள் எடுப்பீர்கள்.
அதிகமான பணத்தின் வருமானம் இருக்கும்.
கடகம்
இந்த இரட்டை புதன் பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை அளிக்கும்.
வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் வரும்.
தற்போது வேலை மற்றும் வணிகத்தில் உயர்வு கிடைக்கும்.
பொருளாதார நிலை மேம்படும்.
புதிய தொழில் ஆரம்பித்தால் வெற்றி கிடைக்கும்.
புதிய பண ஆதாயங்கள் கிடைக்கும்.
சிம்மம்
இந்த புதன் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சிறப்பான பலன்களைத் தரும்.
உங்களுக்கு புதிய வழிகளில் இருந்து அதிஷ்டம் கிடைக்கும்.
இருக்கும் வேலையில் பதவி உயர்வு கிடைக்கும்.
வியாபாரிகள் அதிக லாபத்தை பெறுவார்கள்.
வணிகத்தை பெரிய அளவில் விரிவுபடுத்த நல்ல வாய்ப்புகள் உள்ளன.
பல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.