பிரியங்கா தேஷ்பாண்டே
விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளர் VJ பிரியங்கா. சூப்பர்சிங்கர் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்துக் கொண்டு ரன்னர் அப் ஆனார். சூப்பர் சிங்கர், Oo Solriya, ஸ்டார்ட் ம்யூசிக் என பல நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கும் தனித்துவமான பாணியால் இவருக்கொன தனி ரசிகர் பட்டாளமே உருவானது.
இந்நிலையில் நேற்றைய தினம் தனது ரசிகர்களுக்கு அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி தரும் வகையில் தனக்கு திருமணம் நடந்து முடிந்துவிட்டது என கூறினார்.
கர்நாடகாவைச் சேர்ந்த பிரவீன் குமார் என்பவருடன் முதல் திருமணத்தை பிரியங்கா நடத்தி முடித்த நிலையில், இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். நீண்ட காலமாக ரசிகர்களை மகிழ்வித்து வரும் பிரியங்காவின் தனிப்பட்ட வாழ்க்கை வலிகள் நிறைந்ததாகவே இருந்தது.
இந்நிலையில் தான் டிஜே வசி சாச்சி என்பவரை தான் விஜய் டிவியின் செல்ல தொகுப்பாளினி பிரியங்கா நேற்று திருமணம் செய்துக் கொண்டார். மேலும் அவர் சொந்தமாக ஒரு ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
நிகழ்ச்சியின் போதுதான் இருவரும் சந்தித்துக்கொண்டதாகவும் இவர்களின் நட்பு பின்னர் அழகிய காதலாக மாறியமாகவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், திருமணத்திற்கு 3 ஆண்டுகளுக்கு முன்னரே இருவரும் DJ பார்ட்டி ஒன்றில் சந்தித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அதனை பார்த்த ரசிகர்கள் பலரும் அப்ப புரியல, இப்ப புரியுது என ஜாலியான கமெண்டுகளை பதிவிட்டு வருவதுடன் இவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றனர்.
View this post on Instagram