ஊடகவியலாளர் சந்திப்பில் பொய்யான தகவல்களை வெளியிட்டதாக கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
முறி ஆணைக்குழு மேற்கொண்ட விசாரணையின் போது பந்துல இதனைத் தெரிவித்துள்ளார்.
முறி மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு, அறிக்கை ஒன்றை அனுப்பியதாக ஊடகவியலாளர் சந்திப்பில் போலியான தகவலை வெளியிட்டதாக அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
அவ்வாறு பகிரங்கமாக தான் கூறியது பொய் என பந்துல குணவர்தன ஏற்றுக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில் அவரது சட்டத்தரணியாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச செயற்பட்டுள்ளார்.
சட்டத்துறையிலும் அரசியல் செயற்பாட்டை முன்னெடுக்க முயன்ற, நாமல் ராஜபக்ஷவுக்கு இதுவொரு அசிங்கமான சம்பவமாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் நாமல் ராஜபக்சவுக்கு வரலாற்று அசிங்கமாகியுள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.