தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் காதலிக்கத் தொடங்கிய அமீர்- பாவனி ஜோடிக்கு இன்று (ஏப்ரல் 20) திருமணம் நடைபெற்றுள்ளது. குறித்த புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
அமீர் – பாவனி
பிக் பாஸ் சீசன் 5 இல் போட்டியாளராகக் கலந்துகொண்ட பாவனி ரெட்டி மற்றும் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்த அமீர் ஆகியோர் காதலிக்க தொடங்கி அதை BB ஜோடிகள் ஷோவில் உறுதியாகவும் அறிவித்தனர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சின்னத்தம்பி’ சீரியலில் கதாநாயகியாக நடித்தவர் பாவனி. அதன் பிறகு பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார்.
அதே பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராகக் கலந்துகொண்டவர் டான்ஸ் மாஸ்டர் அமீர்.
இருவரும் காதலித்து வந்தநிலையில் இந்த ஆண்டு காதலர் தினத்தன்று பாவனி தனது அமீருடன் கை கோர்த்தபடி இருக்கும் வெளியிட்டு திருமண திகதியை அறிவித்திருந்தார்.
இந்நிலையில் அமீர்- பாவனிக்கு இன்று திருமணம் நடைபெற்று முடிந்திருக்கிறது. ப்ரியங்காவும் அவரது கணவரும் திருமணத்தில் கலந்துகொண்டிருக்கின்றனர்.
இந்த திருமணத்தை பிரியங்கா தான் முன்னின்று நடத்தி வைத்திருக்கிறார். அமீர்- பாவனியின் திருமணப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களைத் குவித்து வருகின்றனர்.