பாபா வாங்காவின் கணிப்புகளின் படி, எதிர்வரும் 2066-ஆம் ஆண்டு குறிப்பிட்ட சில நாடுகள் ஆயுதத்தால் உலகத்துக்கு ஆபத்து விளைவிக்கும் என கூறப்படுகிறது.
பாபா வாங்கா
“பாபா வாங்கா” என அழைக்கப்படும் வான்ஜெலியா பாண்டேவா டிமிட்ரோவா கடந்த 1911 இல் பல்கேரியாவில் பிறந்தார்.
இவர், ஒரு கிராமப்புற குடும்பத்தில் வளர்க்கப்பட்ட குழந்தையாக இருந்தபோது இயற்கை சீற்றத்தால் பார்வையை இழந்துள்ளார். அதன் பின்னர் அவருக்கு எதிர்காலத்தை முன்கூட்டியே கணிக்கும் திறன் கிடைத்துள்ளது.
இயற்கை பேரழிவுகள், அரசியல் நிகழ்வுகள் மற்றும் உலகளாவிய மோதல்களை முன்னறிவிக்கும் பாபா வாங்கா, “பால்கனின் நாஸ்ட்ராடாமஸ்” என்ற பெயரிலும் அழைக்கப்பட்டார்.
ஒவ்வொரு ஆண்டு பிறக்கும் போதும் பெரும்பாலான மக்கள் பாபா வாங்காவின் கணிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவார்கள். ஏனெனின் பாபா வாங்காவின் பல கணிப்புகள் பலித்துள்ளது.
அந்த வகையில் எதிர்வரும் 2066 ஆம் ஆண்டில் என்னெ்னன நடக்கப்போவது என பாபா வாங்கா கூறியது சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பில் பதிவில் பார்க்கலாம்.
2066-ல் நடக்கப்போவது என்ன?
பாபா வாங்காவின் கணிப்பில், எதிர்வரும் 2066 ஆம் ஆண்டில், அமெரிக்கா மிகவும் ஆபத்தான ஒரு ஆயுதத்தை உருவாக்கும் என கூறப்படுகிறது. அதே போன்று அடுத்த 41 ஆண்டுகளில் அமெரிக்கா கண்டுபிடிக்கும் ஆயுதம் உலக சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறவும் வாய்ப்பு உள்ளது.
ஏற்கனவே பாபா வாங்கா கணித்த கணிப்புக்கள் பலித்துள்ளதால் இதுவும் பலிக்க வாய்ப்புள்ளதாக மக்கள் அச்சம் கொள்கிறார்கள். அமெரிக்கா தனது ஆயுதங்கள் மூலம் முழு உலகையும் தனது ஆதிக்கத்திற்கு கீழ் கொண்டு வரும்.
பாபா வாங்கா தனது வாழ்நாளில் பல கணிப்புகளைச் செய்தார், அவற்றில் பெரும்பாலானவை உண்மையாகியுள்ளதால் அவரது கணிப்புகளில் அமெரிக்காவின் 9/11 இரட்டைக் கோபுர தாக்குதல்கள், கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் 2004 சுனாமி உள்ளிட்ட அனர்த்தங்களும் உள்ளடங்கியுள்ளன.
இதனை தெரிந்து கொண்ட பல ஊடகங்களின் அறிக்கையின் படி, அமெரிக்கா பல ஆபத்தான கொடிய ஆயுதங்களை வைத்திருக்கிறது. உலகின் மிக சக்திவாய்ந்த அணு ஆயுதங்கள் அமெரிக்காவில் தான் உள்ளது.
அணு ஆயுத பயன்பாடு
ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் (SIPRI) அறிக்கையின்படி, “கடந்த 2024 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் ஆயுத விற்பனை மொத்தம் USD318.7 பில்லியனாக இருந்தது.
இதற்கு முன்னர் விற்பனை செய்த அளவை விட 29% அதிகமாகியுள்ளது. உலகளாவிய ஆயுத ஏற்றுமதியில் 42% என்பதால் எதிர்வரும் காலங்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டுள்ளது.
உலக வரலாற்றில் வேறு ஒரு நாட்டின் மீது அணு ஆயுதத்தைப் பயன்படுத்திய ஒரே நாடு அமெரிக்கா என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். கடந்த 1945 ஆம் ஆண்டில், இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அமெரிக்கா அணுகுண்டை வீசியதால் மில்லியன் கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்தனர்.
மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்டனர். அதன் பாதிப்பு இன்று வரை உலக வரலாற்றின் அழிக்க முடியாத கரும் புள்ளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.