சமீபக் காலமாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பார்ப்பதற்கு புதிராகவும் வசீகரமாகவும் இருக்கும். இவை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.
அத்துடன் இப்படியான படங்களை வைத்து ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.
நம் மூளையின் செயற்பாட்டின் பொருத்தே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பதிலளிக்க முடியும். மாறாக இதை வைத்து ஒருவரின் குணாதியங்களையும் கண்டுக் கொள்ளலாம்.
அந்த வகையில், ஒரு புதிர் நிறைந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ? அதனை பொறுத்து உங்களின் குணங்களை கணித்துக் கொள்ளலாம்.
படத்தில் என்ன தெரிகிறது?
1. அன்னை திரேசாவின் முகம்
ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் போது அன்னை திரேசாவின் முகம் தெரிந்தால் நீங்கள் அதிகம் இரக்கம் கொண்டவர்களாக இருப்பீர்கள்.
எப்போதும் உங்களை சுற்றி நண்பர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள். அதனை தான் நீங்களும் அதிகமாக விரும்புவீர்கள்.
வெளியே அதிகம் சுற்ற விரும்புவீர்கள். இதனால் சண்டைகள் மற்றும் பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கும்.
அமைதியான குணம் உங்களிடம் இருக்கும். இதற்காகவே பலர் உங்களிடம் பேசுவதற்கு விரும்புவார்கள்.
வெளிப்படையாக நடந்து கொள்வீர்கள்.
யாரை பற்றியும் பேசுவதற்கு விரும்பமாட்டீர்கள்.
2. குழந்தையுடன் இருக்கும் தாய்
ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் போது கண்களுக்கு குழந்தையுடன் இருக்கும் தாய் தெரிந்தால் நீங்கள் தனிமை விரும்பிகளாக இருப்பீர்கள்.
எவ்வளவு பணம் கொடுத்தாலும் இன்னொருவரிடம் வேலைப் பார்க்காமல் சொந்த தொழிலை செய்ய விரும்புவீர்கள்.
வெளியே சுற்ற விரும்பமாட்டீர்கள்.
வீட்டில் இருப்பதை அதிகமாக விரும்பும் காரணத்தால் உங்களுக்கு வெளியுலக அனுபவங்கள் குறைவாகவே இருக்கும்.
ஒரு உள்முக சிந்தனையாளராக இருக்கும் நீங்கள் மனதில் இருப்பதை எப்போதும் வெளிப்படையாக கூறமாட்டீர்கள்.
உங்களின் ஆறுதல் மண்டலத்தை விட்டு வெளியே வர விரும்பமாட்டீர்கள்.
ஒரு அசாதாரண ஆடம்பரமான வாழ்க்கையை வாழ கனவு காண்பீர்கள்.