பிரபல நடிகை பாவனாவுக்கும், கன்னட சினிமா தயாரிப்பாளரான நவீன் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நேற்று நடைபெற்றது.
தமிழ், மலையாளத்தில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை பாவனா. இவர் 75க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
கடந்த மாதம் கேரளாவில் மலையாள படப்பிடிப்பை முடித்துவிட்டு காரில் திரும்பியபோது பாவனாவை சிலர் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்தனர்.
இதுதொடர்பாக பாவனா கொடுத்த புகாரின் பேரில் பொலிசார் குற்றவாளிகளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இவருக்கும், கன்னட திரைப்பட தயாரிப்பாளரான நவீன் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
இதில், இரு குடும்பத்தைச் சேர்ந்த நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
இந்த வருடம் இறுதியில் பாவனா- நவீன் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.