தமிழகத்தில் தாலிகட்டும் நேரத்தில் மணமகளான அக்கா விஷம் குடித்து மயங்கி விழுந்ததால், தங்கையை மாப்பிள்ளை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலகுமார்(27). இவருக்கும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சரண்யா என்பவருக்கும் நேற்று முன்தினம் துறையூரில் உள்ள கோவிலில் திருமணம் நடைபெற இருந்தது.
இந்நிலையில் சரண்யாவை கோவிலுக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்த போது திடீரென்று மயங்கி விழுந்தார். அதன் பின் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, அவர் விஷம் குடித்திருந்தது தெரியவந்தது.
இதை அறிந்து அதிர்ச்சியடைந்த மணமகன் வீட்டார் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.
அதன் பின் பொலிசார் நடத்திய சமரசத்தின் பேரில், சரண்யாவின் தந்தை சங்கீதாவை திருமணம் செய்து தருவதாக கூறியுள்ளார்.
சங்கீதா கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார், இதற்கு அவர் சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பாலகுமாருக்கும், சங்கீதாவுக்கும் திருமணம் நடைபெற்றது, காவல்நிலையத்தில் கொடுத்த புகாரும் திரும்ப பெறப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் சரண்யாவுக்கு படிக்க விரும்பியதாகவும், பெற்றோரின் வற்புறுத்தலுக்காகவே சம்மதம் தெரிவித்ததும் தெரியவந்தது.
இதன் காரணமாகவே விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.