சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளிற்கு தீர்வுகளைப் பெற்றுத்தருவதற்கு எதிர்வரும் 27 ஆம் திகதி வரையில் அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்க தீர்மானித்துள்ளதாக, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க தலைவர் நிர்மால் ரஞ்சித் தேவசிறி அரசாங்கத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பல்கலைக்கழக கற்றல் நடவடிக்கைகள் பாதிப்படைவதைக் கருத்திற்கொண்டே தாம் மேற்படி தீர்மானத்தினை எடுத்துள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தினால் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.
அத்துடன் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் முன்னெடுத்து வந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டதை கைவிட்டு, மேற்படி கால அவகாசத்தினை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
எனினும் எதிர்வரும் இரண்டு வார காலத்துக்குள் தீர்வுகளைப் பெற்றுத் தர முடியாது போனால், கைவிடப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பை மீண்டும் தொடர்வதற்கு தமது சங்கம் தயாராகவுள்ளதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.