Loading...
பிரதான வீதி, செங்கலடியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான தம்பையா குமரதாசன் (56) என்பவர் நேற்று மதியம் அவரது வீட்டில் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு செய்த மனைவி, விசாரணையின் பின் இருவரும் சமரசமாக சென்றாலும் அன்றிலிருந்து இன்றுவரை கணவர், மனைவியுடன் பேசாமலே இருந்துள்ளார்.
Loading...
நேற்று காலை தனியார் வங்கிக்கு சென்று பகல் வீடு திரும்பிய மனைவிதான், இவர் தூக்கில் தொங்கி மரணித்திருப்பதை கண்டு ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
விசாரணைகளின் பின்னர் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை நடைபெற்று பிரேதம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
Loading...