அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் நியமனம் தொடர்பில் சசிகலா கையெழுத்திட்ட கடிதம் இன்று (வெள்ளிக்கிழமை) தேர்தல் ஆணையகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சசிகலா சார்பாக அவரது வழக்கறிஞர்கள் ராகேஷ் சர்மா, பரணிகுமார் ஆகியோர் தேர்தல் ஆணையகத்தில் இந்த கடிதத்தினை வழங்கி வைத்துள்ளனர்.
சசிகலா எவ்வாறு அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக தெரிவு செய்யப்பட்டார் என்பது குறித்து 70 பக்கங்களில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு முன்னர் அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் நியமனம் குறித்து துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனின் கையெழுத்திட்ட கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
குறித்த கடிதங்களை ஏற்க மறுத்து தேர்தல் ஆணையகம் கடிதம் அனுப்பியிருந்ததுடன் 10ஆம் திகதிக்கு (இன்று) முன்னர் பதில் அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது.
இதையடுத்து, கடைசி நாளான இன்று அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் நியமனம் குறித்து சசிகலா கையெழுத்திட்ட கடிதம் அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.