இந்தி படஉலகின் பிரபல இயக்குனர்களில் ஒருவர் கரண்ஜோஹர். இவர் ஓரின சேர்க்கையாளர். அதை ஒப்புக்கொள்வதில் வெட்கப்படவில்லை என்றும் சமீபத்தில் கூறி இருந்தார்.
இதையடுத்து கரண்ஜோஹர் குழந்தையை தத்து எடுத்து வளர்க்க முடிவு செய்தார். பின்னர் மனதை மாற்றி வாடகை தாய் மூலம் தனது வாரிசை உருவாக்க திட்டமிட்டார். அதன்படி ஒரு வாடகை தாய் மூலம் பிறக்கும் தனது குழந்தையை வளர்க்க முடிவு செய்தார்.
இதற்காக ஒரு வாடகை தாயை தேர்வு செய்து மருத்துவர்கள் மூலம் இவரது உயிர் அணுவை பயன்படுத்தி அந்த பெண் கருவுற ஏற்பாடு செய்யப்பட்டது. இப்போது வாடகை தாய் மூலம் ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டை குழந்தைக்கு கரண் தந்தையாகி இருக்கிறார்.
ஆண் குழந்தைக்கு யஷ் ஜோஹர் என்றும், பெண் குழந்தைக்கு ரூஹி ஜோஹர் என்றும் பெயர் வைத்திருக்கிறார். யஷ் என்பது இவரது தந்தை பெயர் ரூஹி என்பது தாய் பெயர். வாடகை தாய் மூலம் தந்தையாகி இருக்கும் இந்தி டைரக்டர் கரணுக்கு இந்தி திரை உலகினர் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்கள்.