கூட்டு எதிர்க்கட்சி மற்றும் அரசாங்க உறுப்பினர்களுக்கிடையே ஏற்பட்ட குழப்ப நிலைமை காரணமாக நாடாளுமன்றம் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தேசிய சுதந்திர முன்னணி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்க கோரிக்கை விடுத்தமை தொடர்பிலேயே இந்த குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த கோரிகையை ஏற்றுக்கொள்ள முடியாது என ஏற்கனவே சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்திருந்தார்.
குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்திய காரணத்தினால் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவை ஒரு வார காலத்துக்கு நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.