‘நானும் ரவுடி தான்’ படத்துக்கு அப்புறம், நயன்தாராவையும் விக்னேஷ் சிவனையும் எங்கேயும் ஒண்ணா தான் பார்க்க முடிகிறது. சிங்கப்பூர் விருது வழங்கும் விழாவில் கூடவே கூட்டிட்டு போய் கூடவே கொண்டு வந்து விட்ட விக்கி, நயன் இருக்கும் இடத்தில எல்லாம் இருந்தார். நயனுக்கு கதை சொல்லும்போது விக்கியை பார்க்கலைன்னு சொல்லுறவங்களை இன்னும் யாரும் பார்க்கலை.
இப்படி ஒண்ணாவே வாழ்ந்து,ஒண்ணாவே சுத்தின இந்த ஜோடியை பிரிச்ச புண்ணியம் சூர்யாவுக்கு தான் போகும். ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை சூர்யா தயாரித்து நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்குவார் என்றபோதே விக்கி நயன்தாராவை ஹீரோயினாக்க முயற்சி செய்தார் என்ற செய்தி வந்தது.
ஆனால், தனுஷ் வட்டாரம் சொல்லி இருக்காதா? இரண்டு பேரும் ஒரே படம் பண்ணா என்னாகும்ன்னு. சுதாரிச்சி சூர்யா சூஸ் பண்ணியது கீர்த்தி சுரேசை.
இதுவரை எல்லாம் சுகமே!
இப்போ ‘தானா சேர்ந்த கூட்டம்’ ஷூட்டிங் நடந்துகொண்டு வருகிறது. ஸ்பாட்டில் கீர்த்தியிடம் வழிந்து வழிந்து விக்கி பேசினாராம். அதை கூட சூர்யா கண்டுகொள்ளவில்லையாம். ஆனால், ஸ்கிரிப்டில் சூர்யா தனியா வருவார் என்ற சீன்களில் கூட, கீர்த்தி இல்லாத சீனில் கூட கீர்த்தி வர, லேசாக யோசித்திருக்கிறார் சூர்யா என்கிறது படக்குழு.
சரின்னு கடுப்பான சூர்யா, கொஞ்சம் நோட் பண்ணி நயனுக்கு அனுப்ப சொல்ல, யூனிட்டில் ஒருவர் சின்சியராக இதை செய்து கொண்டு வருகிறாராம்.
பெத்த புள்ளைகளை பிரபு மாஸ்டர் பார்த்ததுக்கே, ஆட்டையை கலைச்சவர் நயன்; பார்த்துக்கோங்க விக்கி! என்கிறது கோலிவுட்!