தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து புலம்பெயர் அமைப்புக்கள் விடுத்த கோரிக்கையினை ஐ.நா மனித உரிமைப் பேரவை நிராகரித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில், யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் இலங்கையை விசாரணை செய்யவேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
பிரித்தானிய தமிழர் பேரவை, நாடு கடந்த தமிழீழ இராச்சியம், பிரான்ஸ் தமிழர் பேரவை, கனேடிய தமிழர் காங்கிரஸ் மற்றும் ஐரோப்பிய தமிழர் பேரவை போன்ற அமைப்புக்களுடன் இணைந்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மேற்படி கோரிக்கையை விடுத்திருந்தது.
மேலும் இது தொடர்பாக இரா.சம்பந்தன் உட்பட பதினொரு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த ஆவணத்தில் கையொப்பமிட்டுள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில ஊடகமொன்று மேற்படி தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.