6 வயதுடைய சிறுவன். இவன் பிறக்கும் போது இவனது மண்டை ஓட்டில் சிறிய பிழவு காணப்பட்டது. அது தானாகவே அடைபட்டுவிடும் என்று மருத்துவர்கள் நம்பினார்கள். ஆனால் நாளுக்கு நாள் அவனது நிலமை மோசமாகிக் கொண்டு சென்றுள்ளது. தற்போது இவனுக்கு 6 வயது ஆகும் நிலையில். மண்டையில் சுமார் 4 அங்குலம் பிழவு இருக்கிறது.
இதனை எவ்வாறு சரி செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கிறது மருத்துவ உலகம். கம்போடியாவில் பிறந்த இந்தச் சிறுவனுக்கு பெரும் சத்திர சிகிச்சை ஒன்றை மேற்கொண்டால் மாத்திரமே அவன் உயிர்பிழைக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படும் நிலையில். நாம் ஏன் இவனுக்காக பிரார்த்தனை செய்யக் கூடாது என்ற தலைப்பில், பல ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
அதுபோக நல்ல உள்ளம் படைத்த பலர் இவனுக்கு தம்மால் ஆன உதவிகளை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். எனவே வெகு விரைவில் நல்ல செய்தி வரும் என நாம் எதிர்ப்பார்கலாம்.