ஹாங்காங் நகரத்தின் பரபரப்பான தெருவில் ஷிம் ஷா சூய் நகைக்கடை அமைந்துள்ளது. இன்று காலை முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவன் இந்த நகைக்கடைக்கு வந்து, தனது கையில் இருந்த சுத்தியலால் நகைக்கடையின் கண்ணாடியை உடைத்து அதிலிருந்த வைர மோதிரத்தை திருடி சென்றுவிட்டான்.
22 காரட் மதிப்புள்ள அந்த வைர மோதிரத்தின் மொத்த மதிப்பு 5 மில்லியன் டாலர்கள்(இந்திய ரூபாயில் 33 கோடி). திருடன் வைர மோதிரத்தை திருடி செல்லும் காட்சிகள் கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனை வைத்து அந்த பலே திருடனை ஹாங்காங் போலீசார் தற்போது தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
33 கோடி ரூபாய் மதிப்புள்ள வைர மோதிரத்தைத் திருடுவதற்கு அந்த திருடன் எடுத்துக் கொண்ட நேரம் மொத்தம் 7 விநாடிகள் தான். இந்த சம்பவம் ஹாங்காங் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.