கூட்டு எதிரணியின் தவறான செயற்படுகளின் காரணமாக நாடாளுமன்ற பிரதிநிதிகள் மீதான மக்கள் வெறுப்புணர்வு மேலும் அதிரிக்கும் எனவே அவர்களின் செயற்பாடுகளை வன்மையாக கண்டிக்கின்றோம் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சுதந்திர சிறிகொத்தவில்ல இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து கருத்துரைத்த அவர்,
புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்றவகையில் நாம் பாராளுமன்றத்தின் மீது உயர் மரியாதையினைக் கொண்டுள்ளோம்.
ஆனால் கூட்டு எதிரணியினரின் செயற்பாடுகள் காரணமாக பாராளுமன்ற உறுப்பினர்களின் கெளவரம் கேள்விக்குரியாகியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்றால் திருடர்கள் என்றும் பொய்யர்கள் என்றும் அடையாளப்படுத்தியுள்ளனர்.
அந்த எண்ணத்தினை மாற்றியமைக்கும் வகையிலேயே நாம் சரியான பாதையில் பயணிக்கும் மக்கள் பிரதிநிதிகளாக செயற்படுகின்றோம் என்றார்.