Loading...
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 77 இந்திய மீனவர்கள் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களே விடுவிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்தது.
Loading...
அதற்கமைய, யாழ்ப்பாணத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 53 மீனவர்களும் மன்னாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 24 மீனவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவிற்கு அமைய, விடுவிக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகத்திடம் ஒப்படைத்துள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்தது.
Loading...