வடக்கு களுத்துறை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
களுத்துறை சிறைச்சாலையிலிருந்து கடுவெல நீதிமன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்ட போது பாதாள உலகக்குழு உறுப்பினர் சமயங் உள்ளிட்ட ஐந்து பாதாள உலகக்குழு உறுப்பினர்களும் இரண்டு சிறைச்சாலை உத்தியோகத்தர்களும் அண்மையில் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தனர்.
சிறைச்சாலை பஸ்ஸிற்கு போதியளவு பொலிஸ் பாதுகாப்பு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் வடக்கு களுத்துறை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி ஆனந்த சில்வா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வடக்கு கொழும்பிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, இந்தக் கொலைகளுடன் தொடர்புடைய சந்தேக நபர்களின் பூரண விபரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் விரைவில் சந்கேத நபர்கள் கைது செய்யப்படுவர் எனவும் பொலிஸ் தலைமையக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.