தெய்வ தரிசனத்தால் திருப்தி காண வேண்டிய நாள். நட்பால் நல்ல காரியம் நடைபெறும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள்.
உத்தியோக முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். பாசத்தோடு பழகியவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். பாதியில் நின்ற பணிகளை மீதியும் தொடருவீர்கள்.
எண்ணங்கள் ஈடேறும் நாள். வியாபாரப் போட்டிகள் அகலும். அன்றாடப் பணிகள் நன்றாக நடைபெறும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டுவந்து சேர்ப்பர். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
குடும்பச் சுமை கூடும் நாள். கொடுக்கல் வாங்கல் திருப்தி தரும். மன அமைதிக்காக ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். தாமதப்பட்ட காரியங்கள் இன்று துரிதமாக நடைபெறும்.
வரவு திருப்தி தரும் நாள். நண்பர்களின் உதவியோடு தொழிலில் அதிக முதலீடுகள் செய்ய முன்வருவீர்கள். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் வந்து சேரும். அலுவலகப் பணிகளில் ஏற்பட்ட அல்லல்கள் தீரும்.
செல்வாக்கு மேலோங்கும் நாள். செயல்பாடுகளில் வெற்றி கிட்டும். மாலை நேரம் விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இடமாற்றம், ஊர்மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.
கோவில் வழிபாட்டால் குதுகலம் காண வேண்டிய நாள். குடும்ப முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு மறையும். பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டு.
கிரிவலம் வந்து கீர்த்தி காண வேண்டிய நாள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. வரவு திருப்தி தரும்.
பாகப்பிரிவினைகள் சுமுகமாக நடைபெறும் நாள். பாசம் மிக்கவர்கள் பக்கபலமாக இருப்பர். வாகன மாற்றச் சிந்தனை மேலோங்கும். பிள்ளைகள் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.
பிரயோகித்த சொற்களால் பிரச்சினைகள் ஏற்படும் நாள். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. சுதந்திரமாக எதையும் செய்ய இயலாது. விரயங்களைத் தவிர்க்க விழிப்புணர்ச்சி தேவை.
நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். நினைத்த காரியம் நிறைவேறும் நிம்மதிக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். இடமாற்றம், ஊர்மாற்றங்கள் எதிர்பார்த்தபடி அமையும்.
ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். அருகில் உளளவர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும்.தனவரவு திருப்தி தரும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.