தேவையான பொருட்கள் :
வேகவைத்த வரகு – 2 தேக்கரண்டி
வேகவைத்த பனி வரகு – 2 தேக்கரண்டி
வேகவைத்த தினை – 2 தேக்கரண்டி
முளைகட்டிய பாசிப்பயறு – 3 தேக்கரண்டி
முளைகட்டிய ராகி – 2 தேக்கரண்டி
முளைகட்டிய வேர்க்கடலை – 1 தேக்கரண்டி
துருவிய கேரட் – 2 தேக்கரண்டி
இந்து உப்பு – 1சிட்டிகை,
எலுமிச்சை சாறு – 2 தேக்கரண்டி
மிளகு சீரகப் பொடி – 1/4 தேக்கரண்டி
செய்முறை :
* பாசிப்பயறு, ராகி மற்றும் வேர்க்கடலை ஆகியவற்றை முதல் நாள் காலையில் ஊறவைத்து, இரவு, வலை போல் இருக்கும் துணியில் கட்டி வைத்தால் அவை மறுநாள் காலையில் முளைத்து விடும். இவ்வாறு ராகியையும், பயிரையும் முளைகட்டிக்கொள்ள வேண்டும்.
* வரகு, பனி வரகு மற்றும் தினையை சற்று ஊறவைத்து தண்ணீருடன் சேர்த்து 5 நிமிடம் வேகவைத்தால் நன்கு வெந்துவிடும். அவற்றையும் உதிரியாக வடித்துக்கொண்டு தயாராக எடுத்துக் கொள்ளவேண்டும்.
* மேலே கொடுத்துள்ள எல்லா பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறிக்கொள்ள வேண்டும்.
* சுவையான சிறுதானிய சாலட் தயார்.