Loading...
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேசப்புடன், வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் இரகசிய சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மானம் தொடர்பில் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
Loading...
சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்புடன் கலப்பு நீதிமன்றமொன்று உருவாக்கப்பட வேண்டுமென்ற யோசனையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் விக்னேஸ்வரன் சமர்ப்பித்துள்ளார் என சிங்கள ஊடகம் குற்றம் சுத்தியுள்ளது.
இதேவேளை, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் பத்து அரச சார்பற்ற நிறுவனங்கள் கலப்பு நீதிமன்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமேன ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிடம் எழுத்து மூலம் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது
Loading...