இலங்கையின் சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சர்வதேச ரீதியான கௌரவம் கிடைத்துள்ளதாக ஜெனிவாத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மியன்மாரின் அரச தலைவர் ஆங் சாங் சூகிக்கு சர்வதேச ரீதியில் கிடைத்திருந்த கௌரவம், தற்போது இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் கிடைத்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சர்வதேச கௌரவத்தை பெற்றுக்கொள்ள முடிந்துள்ளதாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹுசைன் அண்மையில் ஜெனிவாவில் இராஜதந்திர அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
அந்த சந்தர்ப்பத்தில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உட்பட இலங்கை பிரதிநிதிகள் சிலரும் அந்த இடத்தில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
விசேடமாக ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க வழிமுறைகளுக்கான செயலணியின் மக்களின் கருத்து கோரும் நடவடிக்கை தொடர்பில் ஆணையாளர் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
7000க்கும் அதிகமான இலங்கை மக்களிடம் கருத்து கேட்கப்பட்டு, அறிக்கையின் முடிவுரையை நடைமுறைப்படுத்துமாறு ஐ.நா ஆணையாளர் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
எனினும் அந்த அறிக்கையின் பரிந்துரைகள் சில ஜனாதிபதியினால் தற்போதுவரையில் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பல்வேறு அரச சார்பற்ற அமைப்புகளின் அவசியத்திற்கமைய தான் செயற்படுவதில்லை என அண்மையில் ஜனாதிபதி பகிரங்கமாக அறிவித்திருந்தார்.
மியான்மரின் அரச தலைவர் ஆங் சாங் சூகியினால் தற்போது முன்னெடுக்கப்படும் முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கை, சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர்களின் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளன.
ஆங் சாங் சூகி அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.