ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் வீரர்களின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டுள்ளது.
இதன்படி பேட்ஸ்மேன் தர வரிசையில் தென்ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் (875 புள்ளிகள்), ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் (871 புள்ளிகள்) ஆகியோர் முறையே முதல் 2 இடங்களில் தொடருகின்றனர். இந்திய அணி கேப்டன் விராட்கோலி (852 புள்ளிகள்) 3-வது இடத்தில் நீடிக்கிறார்.
இந்திய வீரர்கள் ரோகித் சர்மா 12-வது இடத்திலும், டோனி 13-வது இடத்திலும் தொடருகின்றனர். பந்து வீச்சு தர வரிசையில் தென்ஆப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹிர் முதலிடத்தில் தொடருகிறார். இந்திய வீரர் அக்ஷர் பட்டேல் 11-வது இடம் பிடித்துள்ளார்.
ஆல்-ரவுண்டர் தர வரிசையில் வங்காளதேச வீரர் ஷகிப் அல்-ஹசன் முதலிடத்தை தக்கவைத்துள்ளார். இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா 10-வது இடத்தில் உள்ளார்.