யாழ். மத்திய கல்லூரிக்கும், சென்ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான 111ஆவது வடக்கின் பெரும் சமர் துடுப்பாட்ட போட்டிகள் கடந்த வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இதில் முதல் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற சென்ஜோன்ஸ் கல்லூரி களத்தடுப்பைத் தீர்மானித்தது.
முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய யாழ். மத்திய கல்லூரி 58 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 164 ஒட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் தசோபன் 48 ஓட்டங்களையும், கார்தீபன் 27 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர். பந்துவீச்சில் சென்ஜோன்ஸ் கல்லூரி சார்பில் கபில்ராஜ், அபினாஸ் முறையே 43 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்ஜோன்ஸ் கல்லூரி சகல விக்கெட்டுகளையும் இழந்து 253 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் யதுசன், துலக்சன் 41, ஜெனிபிளமிங் 37, கிசாந்துஜன் 29, ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் தசோபன் 4 விக்கெட்டுகளையும் துசாந்தன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இரண்டாம் இனிங்சிற்காக 89 ஓட்டங்கள் பின்னிலையில் துடுப்பெடுத்தாடிய யாழ். மத்திய கல்லூரி 82 ஓட்டங்களுக்கு பின்னர் சகல விக்கெட்டுகளையும் இழந்து இனிங்ஸ் தோல்வியை சந்தித்தது. துடுப்பாட்டத்தில் மத்திய கல்லூரி சார்பில் மதுசன்18, பிரியலக்சன்12 ஒட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர். பந்துவீச்சில் சென்ஜோன்ஸ் கல்லூரி சார்பில் கபில்ராஜ் 6, யதுசன் 2 இலக்குகளையும் வீழ்த்தி இருந்தனர்.
போட்டியில் சென். ஜோன்ஸ் கல்லூரி வீரர் கபில்ராஜ் சரித்த பத்து விக்கெட்டுகள், யதுசனின் சகலதுறை ஆட்டம், அபினாஷின் இறுதி நேரப் பந்து வீச்சு ஆகியவற்றோடு இணைந்த ஜெனி பிளமிங்கின் களத்தடுப்பு மற்றும் அணித்தலைமை ஆகியன துணை நிற்க 27 (1990) வருடங்களின் பின் வடக்கின் பெரும் போரில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றிருக்கின்றது சென். ஜோன்ஸ் கல்லூரி.
இப் போட்டியில் சிறந்த ஆட்ட நாயகன் விருதை சென் ஜோன்ஸ் கல்லூரி வீரர் கபில்ராஜ்,
சிறந்த துடுப்பாட்ட வீரர் யதுசன் ( சென் ஜோன்ஸ்), சிறந்த பந்து வீச்சாளர் – கபில்ராஜ் ( சென் ஜோன்ஸ்), சிறந்த சகலதுறை வீரர் – தசோபன் ( யாழ் மத்தி),
சிறந்த களத்தடுப்பாளர் – ஜெனி பிளமின்( சென் ஜோன்ஸ்), சிறந்த விக்கெட் காப்பாளர் – தேவபிரசாத் ( சென்ஜோன்ஸ் கல்லூரி) ஆகியோர் பெற்றுகொண்டனர்.