தற்போதைய காலத்தில் மார்பக புற்றுநோயின் தாக்கத்திற்கு பல பெண்கள் ஆளாகின்றனர்.
ஆனால் இப்படி மார்பக புற்றுநோய் பலரையும் தாக்குவதற்கு முக்கிய காரணம் அன்றாடம் நாம் சாப்பிடக் கூடிய உணவுப் பொருட்களும் காரணமாம்.
சமீபத்திய ஆய்வில், நாம் தினமும் குடிக்கும் பால் தான் மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிப்பதாக கண்டுபிடித்துள்ளனர்.
புற்றுநோயின் ஆய்வு
நார்வே ஆய்வாளர்கள் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில், தினமும் 1 அல்லது 1/2 கப் பாலைக் குடிப்பவர்களை விட, 3 கப் பாலைக் குடிப்பவர்களுக்கு, 3 மடங்கு அதிகமாக மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது என்று கூறுகின்றனர்.
உலகிலேயே பின்லாந்து, ஸ்வீடன், பிரிட்டன், கனடா மற்றும் அமெரிக்கா இது போன்ற நாடுகளில் உள்ள மக்கள் மார்பக புற்றுநோயினால் அதிகமாக பாதிப்படைகிறார்கள்.
ஏனெனில் அந்த நாடுகளில் பால் உற்பத்தியும், அதைப் பருகுவோரின் எண்ணிக்கையும் அதிகம் இருப்பது தான் காரணம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
பால் எப்படி புற்றுநோயை உண்டாக்குகிறது?
பாலில் உள்ள ஹார்மோன்கள் மற்றும் அதில் உள்ள குறிப்பிட்ட உட்பொருட்களும் தான் புற்றுநோயை உண்டாக்குகிறது.
மேலும் இத்தகைய பாலில் சுத்திகரிக்கப்பட்ட விட்டமின் D சத்துக்கள் அதிகமாக சேர்க்கப்படுகிறது. எனவே அதிகமாக பால் குடிப்பதால் புற்றுநோய் ஏற்படுகிறது என்று ஆய்வாளர்கள் கூறிகின்றனர்.
புற்றுநோய் ஏற்பட மற்ற காரணம் என்ன?
ஒருவருக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கு, அவர்களின் மோசமான டயட், காய்கறிகள், மீன் போன்றவற்றை குறைவாக சாப்பிடுவது, சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை அதிகம் சாப்பிடுவது இது போன்ற காரணங்கள் உள்ளது.
குறிப்பு
பெண்கள் 12 மணி நேரம் முழுவதும் இறுக்கமான உள்ஆடையை அணிவதாலும் கூட புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.