Loading...
அதிகப்படியான உடல் பருமன் பிரச்சனையால் உடல் மற்றும் மனம் ரீதியாக பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.
Loading...
நமது பாரம்பரிய வைத்திய முறைகளில் பயன்படும் ஆயுர்வேத மூலிகைகள் உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கினை வகிக்கிறது.
உடல் எடை குறைய என்ன செய்ய வேண்டும்?
- நெல்லிக்காயின் விதையை நீக்கி விட்டு அதை அரைத்து சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால், அது உடலில் உள்ள கெட்டகொழுப்பைக் குறைத்துவிடும்.
- ஆமணக்கின் வேரை இடித்து அதை தேனில் கலந்து இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் அதை கசக்கிப் பிழிந்து, அந்த சாற்றைக் குடித்தால் உடல் பருமன் விரைவில் குறைந்துவிடும்.
- சிறிதளவு பாதாம் பவுடரில் தேன் கலந்து அதை காலையில் உணவு சாப்பிடுவதற்கு பின் சாப்பிட்டு வந்தால், உடல் எடை விரைவில் குறையும்.
- கேரட்டுடன் தேன் சேர்த்து கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால், அது நமது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து, உடல் எடை குறைக்கிறது.
- தண்ணீரில் சோம்பை போட்டு காய்ச்சி அந்த நீரை அடிக்கடி தினமும் குடித்து வந்தால், உடல் எடை குறைந்து விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
Loading...