Loading...
கேப்பாப்புலவு நில மீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த மக்களில் இருவர் இன்றிலிருந்து சாகும்வரையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று காலை குறித்த இருவரும் இராணுவ முகாமிற்கு முன்பாக சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
Loading...
தமது சொந்த இடமான கேப்பாப்புலவில் தம்மை குடியேற்றுமாறு கடந்த முதலாம் திகதியிலிருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த குறித்த மக்களில் இருவர் இன்றிலிருந்து சாகும் வரையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இன்றுடன் பதினோராவது நாளாக போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. பாடசாலை, கோவில்கள், பொதுநோக்குமண்டபம் உள்ளிட்டவை மற்றும் தமது பொருளாதார வளமும் இராணுவத்தால் கையகப்படுத்தபட்டுள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
Loading...