நடிகர் கமலஹாசன் நம்நாடு முன்னேற்ற கழகம் என்ற பெயரில் விரைவில் கட்சி தொடங்கவிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
பிரபல திரைப்பட நடிகர் கமலஹாசன் சில மாதங்களாகவே அரசியல் சம்மந்தமான விடயங்களில் அதிக அக்கறை காட்டி வருகிறார்.
சசிகலாவை எதிர்ப்பது, ஓ.பி.எஸ்க்கு ஆதரவு தெரிவிப்பது என தொடர்ந்து அரசியல் சம்மந்தமான விடயங்களை கமல் பேசி வருகிறார்.
தனது டிவிட்டர் பக்கத்திலும் இது சம்மந்தமாக பதிவேற்றி வருகிறார்.
சில தினங்களுக்கு முன்னர் தமிழகம் முழுவதுமிருக்கும் கமல் நற்பணி இயக்கத்தின் முக்கிய நிர்வாகிகளை தன் வீட்டுக்கு வரவழைத்த்து கமல் முக்கிய ஆலோசனை செய்தார்.
இது அரசியல் சம்மந்தமாக தான் என கூறப்பட்ட நிலையில் இது குறித்து அவர் வெளியில் பேசவில்லை.
இந்நிலையில், கமல் விரைவில் கட்சி ஆரம்பிக்கவிருப்பதாகவும், அந்த கட்சிக்கு நம்நாடு முன்னேற்றக் கழகம் என்றும் பெயர் வைத்துள்ளதாகவும் அரசல் புரசலாக செய்திகள் அடிபடுகின்றன