Loading...
அமெரிக்காவில் உள்ள ஒரு பூங்காவில் இருக்கும் மரம் இளம் பெண் மீது விழுந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள Snohomish கவுண்டியை சேர்ந்தவர் Diana Olidinchuk (17).
இவர் நேற்று அங்குள்ள புகழ்பெற்ற Edmonds பூங்காவுக்கு சென்றுள்ளார். பின்னர் பூங்காவில் இருக்கும் ஒரு மரத்தடியில் Diana உட்கார்ந்திருக்கிறார்.
Loading...
அப்போது யாரும் எதிர்பாராத வகையில் Diana மீது அந்த மரம் வேரோடு சாய்ந்து விழுந்துள்ளது.
இதில் இளம் பெண் Diana சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவர் அருகில் உட்கார்ந்திருந்த சில பெண்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
பின்னர் சம்பவ இடத்துக்கு வந்து Diana சடலத்தை கைப்பற்றிய பொலிசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Loading...