பிரபல கவர்ச்சி நடிகை வீணா மாலிக் – ஆசாத் தம்பதிகளுக்கு குடும்ப நீதிமன்றம் விவாகரத்து வழங்கியுள்ளது.
இந்திய திரைப்படங்கள் பலவற்றில் கவர்ச்சி வேடங்களில் நடித்து புகழ்ப்பெற்றவர் வீணா மாலிக். பிரபல ஆங்கில வார இதழில் இவரின் நிர்வாண புகைப்படம் வெளிவந்து சில வருடங்களுக்கு முன்னர் பரபரப்பை ஏற்ப்படுத்தியது.
வீணா மாலிக்- ஆசாத் ஆகிய இருவருக்கும் கடந்த 2013ல் திருமணம் நடைப்பெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
கணவன் மனைவிக்குள் ஏற்ப்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களாகவே இருவரும் பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் இருவரும் விவாகரத்து பெற்று கொள்ளலாம் என முடிவெடுத்து குடும்ப நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு மீது நீதிமன்றத்தில் நேற்று விசாரணை நடைப்பெற்றது. இதில் வீணா மாலிக் – ஆசாத் ஆகியோருக்கு விவாகரத்து வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.