வரவிருக்கின்ற இடைத்தேர்தலில் ஆர்.கே நகர் தொகுதியில் நிச்சயம் வென்றாக வேண்டிய நெருக்கடிக்கு எதிர்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் தள்ளப்பட்டுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால் காலியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12-ம் திகதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது
ஆர்.கே.நகர் தொகுதியின் தேர்தல் முடிவுகள் தான் அதிமுக யாருக்கு என்பதை தீர்மானிக்கும் என்பதால் அங்கு வெற்றி பெற சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், தீபா ஆகியோர் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளனர்.
திமுக செயல் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு ஸ்டாலினுக்கு கடும் சவாலாக ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தல் அமைந்துள்ளது
இதில் தோல்வி அடைந்தாலோ, அதிமுகவில் ஓபிஎஸ் அணி, தீபாவை விட குறைந்த வாக்குகள் பெற்றாலோ திமுகவில் ஸ்டாலினுக்கு கடும் நெருக்கடி ஏற்படும் வாய்ப்புள்ளது.
எனவே தன்னை விட அரசியலில் அனுபவம் குறைந்தவர்களிடம் தோற்று விட கூடாது என ஸ்டாலின் ஆர்.கே நகரில் வெற்றி பெறுவதற்கான வழிகளை நிர்வாகிகளுடன் தீவிரமாக ஆலோசித்து வருகிறார்