நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவினால், சிறைச்சாலையிலிருந்து எழுதிய புத்தகத்தை அச்சிடுவதற்கு,அனுமதி கோரவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
“Ratata One Wama’’ என்ற பெயரிலேயே அவர் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.
இதேவேளை,விமல் தனது இரண்டாவது புத்தகத்தையும் எழுதிவருகின்றார். இரண்டாவதுபுத்தகத்தில் 200 பக்கங்களை நிறைவுச் செய்துள்ளார்.
சிறையில் தான் பெற்றுக் கொண்ட அனுபவங்கள் தொடர்பில்,அவர் இரண்டாவது புத்தகத்தில் எழுதியுள்ளார்.
இருப்பினும் குறித்த புத்தகம் இது வரையில் நிறைவுச் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
புத்தகம் எழுதுவது மட்டுமன்றி,விமல் ஓவியங்களையும் வரைந்துள்ளார். விமல் சிறையில் இருக்கும் போது அவரால் வரையப்பட்ட சில ஓவியங்கள் தொடர்பிலான புகைப்படங்கள் சில சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.