இலங்கையின் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் 6 பேர் இணைந்து விடுதலைப் புலிகள் மேற்கொண்டதாக கூறப்படும் 310 போர் குற்றங்கள் தொடர்பான அறிக்கையை ஜெனிவா மனித உரிமை ஆணையாளரிடம் சமர்பிக்க உள்ளனர்.
மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, மேஜர் ஜெனரல் எஸ். சந்திரசிறி, லெப்டினட் ஜெனரல் தயா ரத்நாயக்க, மேஜர் ஜெனரல் சீவலி வணிகசேகர, அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம, ரியர் அட்மிரல் எம். அமரவீர ஆகியோர் இந்த அறிக்கையை அடுத்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்து அதனை ஜெனிவாவுக்கு அனுப்பி வைக்குமாறு கோரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிரேஷ்ட சட்டத்தரணிகள் 6 பேர் வரைவாக தயாரித்துள்ள இந்த அறிக்கையானது ரியர் அட்மிரல் சரத் வீரசேகர ஜெனிவா மனித உரிமை பேரவையில் உரையாற்றிய பின்னர் பேரவையில் சமர்பிக்கப்பட உள்ளது.
இந்த அறிக்கை ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு பாரதூரமான சவாலக இருக்கும் என ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கையின் எந்த அரசாங்கமும் இதற்கு முன்னர் இந்த அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. அந்த அறிக்கையில் இரகசியமான கடிதங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.