யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற குழப்ப நிலை காரணமாக பொலிஸார் அதிகமானவர்கள் வருகைதந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் பல்கலைக் கழகத்தில் இன்று இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வின் போதே இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் வரவேற்பு நிகழ்வினை பல்கலைக்கழக வளாகத்தினுள் மேற்கொள்ள வேண்டாம் என பல்கலைக்கழக நிர்வாகத்தினால் அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், அதனை மீறி நிகழ்வு நடத்தப்பட்டமையினாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் நிர்வாகத்திற்கும் மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை அதிகரிக்கவே அங்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக இணைப்பு சுதந்திரன் ,
கலைப்பீட புதுமுக மாணவர்கள் வரவேற்பு நிகழ்வினை பல்கலைக்கழக நிர்வாகம் மறுக்கவே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக அங்கு பல்கலைக்கழகத்தில் உள்ள சிற்றுண்டிச்சாலையின் கண்ணாடிகள் சிலரால் உடைக்கப்பட்டிருந்ததுடன், பல்கலை வளாகத்துக்கு வெளியில் இரண்டு வாகனங்களில் சில குழுக்கள் வந்திறங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக பாதுகாப்பிற்காக அங்கு பொலிஸார் பலர் வருகைதரவே, பதற்ற நிலை கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகின்றது.
கடந்த வருடமும் புதுமுக மாணவர்கள் வரவேற்பு நிகழ்வின் போது பிரச்சினைகள் அதிகரிக்கவே வெளியில் இருந்து வந்த குழுக்களால் அது அடிதடியில் முடிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.