காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அவர்களது வருகைக்காக காத்திருக்கின்ற ஒரு காலமாக தற்போதைய காலம் உள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச பெண்கள் எழுச்சி நாளையொட்டி கிளிநொச்சி மாவட்டத்தில் நீள்விழி பெண்கள் அழைப்பின் ஏற்பாட்டில் ஏற்பாடு செய்யப்ட்ட நிகழ்வு இன்று ( கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
நீள்விழி பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் தலைவியும் பூநகரி நல்லுர் ம.வித்தியாலயத்தின் அதிபருமான எஸ்.சூரியகுமாரி தலைமையில் நடைபெற்றுள்ளது.
இதில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய சகோதரர்கள் சகோதரிகள் தாய்மார் தங்களுடைய பிள்ளைகளின் வருகைக்காக காத்திருக்கின்ற ஒரு மிக முக்கியமான காலம்.
பல்வேறுபட்ட நாடுகளில் இவ்வாறான போர்க்குற்றங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் நடந்திருக்கின்றன.
இவ்வாறு போர்நடைபெற்ற நாடுகளில் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் பெண்களாகவே இருக்கின்றனர்.
குறிப்பாக பெண்களை நோக்கியதாகவே அந்தப்போர்கள் எல்லாம் நடத்தப்பட்டிருக்கின்றன.
அவ்வாறு போர் வடிவங்களில் இருந்து மீண்ட பெண்கள் தான் உலகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றார்கள்.
அதேபோல் தான் எமது மண்ணிலும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தாய்மார் மனைவி பிள்ளைகள் தமது
உறவுகளைக் காட்டுமாறு கோரி இன்று போராட்டங்களை நடத்தி வருகின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நிகழ்வில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஊடக கற்கை நெறிகள் விரிவுரையாளர் தேவகௌரி போருக்குப்பின்னர் பெண்ணின் நிலை பற்றிய கருத்துரையினை வழங்கியிருந்தார்.
நிகழ்வில் பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் காணாமல் ஆக்கப்பட்டவர் பெண்கள் அமைப்பின் உறவுகள் எனப்பலர் கலந்து கொண்டனர்.