அமெரிக்காவில் ஒபாமா அரசால் நியமிக்கப்பட்ட 46 அரசு வக்கீல்கள் பதவி விலகுமாறு அட்டார்னி ஜெனரல் ஜெப் செசன்ஸ் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்காவில் 96 அரசு வக்கீல்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் ஒபாமா அரசால் நியமிக்கப்பட்டவர்கள் ஆவார்கள்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு பலர் பதவி விலகினர். இன்னும் 46 அரசு வக்கீல்கள் பதவியில் தொடர்கின்றனர்.
அவர்களின் பதவியை பறிக்க ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதையடுத்து அவர்களை பதவி விலகுமாறு அட்டார்னி ஜெனரல் ஜெப் செசன்ஸ் உத்தரவிட்டுள்ளார்.
இதை நீதித்துறை செய்தித் தொடர்பாளர் சாரா இஸ்குர் புளோரஸ் உறுதிபடுத்தினார்.
இதுபற்றி அவர் குறிப்பிடும்போது, “சீரான அதிகார மாற்றத்தை உறுதி செய்யும் விதத்தில் அரசு வக்கீல்கள் பதவி விலகுமாறு கூறப்பட்டுள்ளனர் என்று கூறினார்.
46 அரசு வக்கீல்களை பதவி விலகுமாறு டிரம்ப் அரசு கூறி இருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாக செனட் சபை எம்.பி. சார்லஸ் சூமர் கருத்து வெளியிட்டுள்ளார்.