ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் கலந்துகொள்ளச் சென்றுள்ள இலங்கை தூதுக் குழுவின் நடவடிக்கைகளை கண்காணிக்க பிரித்தானிய புலனாய்வுத் துறை அதிகாரியொருவரை நியமித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
டேவிட் வெஹெலி என்பவரே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கையிலிருந்து வெளியாகும் இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஐ.நா கூட்டத்தொடர் நடவடிக்கைகளின் போது இலங்கை தூதுக் குழுவினர் ஆசனங்களின் பின்னால் இருந்து அவர்கள் கதைக்கும் விடயங்களை பதிவு செய்து கொள்வது இவரின் பணியாக வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
டேவிட் வெஹெலி தமிழீழ புலம்பெயர் அமைப்புக்களுடன் நெருக்கமான தொடர்பு வைத்துள்ளவர் எனக் குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன் இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு யுத்த நிறுத்த காலத்தில் இலங்கை தொடர்பில் சர்ச்சைக்குரிய அறிக்கையொன்றையும் சமர்ப்பித்திருந்ததுடன், முன்னாள் ஐ.நா. அதிகாரி யஸ்மின் சூகாவுடன் இணைந்து இலங்கைக்கு எதிராக பல்வேறுபட்ட செயற்பாடுகளை மேற்கொண்டவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.