Loading...
பிரம்மாண்டமாக தயாராகி உள்ள ‘பாகுபலி’ படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28 ஆம் திகதி வெளியாகிறது. படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ‘பாகுபலி-2′ படத்தின் டிரைலரை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.
அதிக பொருட்செலவில் உருவாகி இருக்கும் ‘பாகுபலி-2′ படத்தில், அதன் முதல் பாகத்தில் நடித்திருந்த பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
Loading...
பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே உருவாகி உள்ள இந்த படம் அதிக வசூலை குவிக்கும் என்று படக்குழு எதிர்பார்த்துள்ளது.
இந்நிலையில், இந்த படத்தின் டிரைலர் வருகின்ற மார்ச் 16 ஆம் தேதி காலை 9 மணிக்கு திரையரங்குகளில் வெளியாகிறது. அதே நாளில் மாலை 5 மணியளவில் இணையதளத்தில் வெளியாகிறது.
Loading...