இலங்கைக்கும் வடகொரியாவுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து ஐ.நா. பாதுகாப்புச் சபைகேள்வி எழுப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கில ஊடகமொன்று இதனைத் தெரிவித்துள்ளது.
2015 ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் இலங்கையின் பாதுகாப்புத்துறை முக்கியஸ்தர் ஒருவர் வடகொரிய இராஜதந்திரி ஒருவரை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
படகு கட்டுமானம் குறித்தே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேசத்தின் எச்சரிக்கையையும் மீறி வடகொரியா அணு ஆயுத பரிசோதனைகளைமேற்கொள்வதால் அந்நாடு தொடர்பில் சர்ச்சைக்குரிய நிலைமை தோன்றியுள்ள நிலையில்,இலங்கை எவ்வாறு இராஜதந்திர உறவுகளைப் பேண முடியும் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் வடகொரிய தொடர்பு குறித்து அறிக்கையொன்று கடந்த பெப்ரவரி மாதம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்தே விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக குறித்த ஆங்கில ஊடகம் செய்திவெளியிட்டுள்ளது.