புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படும் போது பௌத்த மதத்திற்கு வழங்கப்படும் முன்னுரிமையில் எந்த மாற்றங்கள் செய்ய கூடாது என தான் நம்புவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கலஉட ஸ்ரீ தர்மவிஜய விகாரையில் நடந்த திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
இதனிடையே சில சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள் நாடாளுமன்ற சம்பிரதாயத்திற்கு பொருந்தாது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரான அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அங்குகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் நடந்த நிகழ்வொன்றின் பின்னர் அண்மையில் நாடாளுமன்றத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் அமரவீர இதனை குறிப்பிட்டுள்ளார்.