ஐநா சபையில் ஐஸ்வர்யா தனுஷ் ஆடிய நடனம் தொடர்பான வீடியோ யூடியூபில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
பரதநாட்டியத்தில் முறையான பயிற்சி இல்லாத ஐஸ்வர்யா ராய்க்கு, ஐநா சபையில் ஆடுவதற்கு வாய்ப்பு எப்படி கிடைத்தது என்றும், ஐநாவில் ஆவர் ஆடிய நடனத்தில், முக பாவனைகள் மற்றும் நலினம் போன்றவை சிறப்பாக இல்லை எனவும் கருத்துக்கள் வெளியாகின.
மேலும், பிரபல நடன கலைஞர் அனிதா ரத்னம், இது பரதநாட்டியமா இல்லை பரிதாப நாட்டியமா எனவும் கிண்டல் செய்திருந்தார். அதுமட்டுமின்றி ஐஸ்வர்யாவை கிண்டல் செய்து மீம்ஸ்கள் மற்றும் வீடியோக்கள் கடந்த 2 நாட்களாக வெளியான வண்ணம் இருந்தன.
இந்நிலையில், ஐஸ்வர்யா தனுஷின் நடனம் தொடர்பான வீடியோ மற்றும் மீம்ஸ்களை உடனடியாக யூடியூபிலிருந்து நீக்குமாறு உத்தரவிட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்பொருட்டு, மீம்ஸ் வீடியோக்கள் அனைத்தும் நீக்கப்பட்டு வருகின்றன.