கொழும்பு, கொள்ளுப்பிட்டி, ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடம் ஒன்றின் பகுதி ஒன்று இடிந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.
கட்டிடத்தின் நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த இரண்டு தொழிலாளிகள் மீது கட்டிடத்தின் பகுதி உடைந்து விழுந்துள்ளது.
இதில் படுகாயமடைந்த அவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அவர்களில் ஒருவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.
நுவரெலியா பிலிமான பிரதேசத்தை சேர்ந்த 18 வயதான இளைஞனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
உடல் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேதப் பரிசோதனைகள் நடத்தப்படவுள்ளன.
சம்பவம் குறித்து கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.