Loading...
நடிகை அனுஷ்கா ஷர்மா, தயாரிப்பாளராகவும் சில படங்களை தயாரித்து வருகிறார். இவர் தயாரித்துள்ள ஒரு படம் இம்மாத இறுதியில் வெளியாகிறது. அதன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது நிருபர் ஒருவரின் ஃபோன் மைக் வைக்கும் இடத்தில் இருந்தது. அதில் “மாம் காலிங்” என்ற எழுத்துடன் அலைபேசி அடிக்க உடனடியாக அதை எடுத்து பேசினார் அனுஷ்கா.
Loading...
“ஆண்டி நான் அனுஷ்கா பேசுகிறேன். உங்கள் மகள் பேட்டி எடுத்துக்கொண்டு இருக்கிறார். பேட்டி முடிந்ததும் அழைப்பார்” என போனில் பேசினார். மேலும் அம்மாவை காக்கவைக்க கூடாது எனவும் அவர் கூறினார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
Loading...