Loading...
பாணந்துறை பிரதேசத்தில் வீடொன்றுக்கு எதிரில் பை ஒன்றில் இட்டு வைத்து விட்டு சென்ற பச்சிளம் குழந்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குழந்தை தற்போது பாணந்துறை கேதுமதி பெண்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாணந்துறை நகருக்கு அருகில் குறுக்கு வீதி ஒன்றில் உள்ள வீட்டுக்கு எதிரில் இந்த குழந்தை நேற்று காலை மீட்கப்பட்டது. அயல் வீட்டவர் குழந்தையை கண்டு வீட்டாருக்கு அறிவித்திருந்தார்.
Loading...
குழந்தை போடப்பட்டிருந்த பையில் குழந்தையின் தாயாது இரத்தம் தோய்ந்த சில ஆடைகளும் காணப்பட்டன.
குழந்தையின் தாய் யார்..? என்பது குறித்து இன்னும் தகவல் கிடைக்கவில்லை. எனினும் அந்த பெண்ணை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் கூறியுள்ளனர்.
Loading...