தமிழ்நாட்டில் இரண்டரை வயது பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த நபரின் செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடலூர் மாவட்டத்தின் தீர்த்தாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரின் நண்பர் பழனிச்சாமி.
இருவரும் நேற்று இரவு வீட்டில் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். பின்னர் ராமமூர்த்தி தூங்கிவிட்டார். இந்நிலையில் நள்ளிரவு ராமமூர்த்தியின் மனைவி விழித்து பார்த்தபோது அருகில் தூங்கிக்கொண்டிருந்த இரண்டரை வயது பெண் குழந்தை காணாமல் போனதை கண்டு திடுக்கிட்டார்.
அங்கிருந்த ராமமூர்த்தியின் நண்பர் பழனிச்சாமியையும் அப்போது காணவில்லை. பின்னர் அருகில் உள்ள முட்புதரில் தேடிய போது பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் காயங்களுடன் ராமமூர்த்தியின் குழந்தை கிடந்துள்ளது.
பின்னர் குழந்தையை மருத்துவமனையில் சேர்த்த ராமமூர்த்தியின் மனைவி இது குறித்து பொலிசில் புகார் அளித்தார். குழந்தையை கடத்தி பலாத்காரம் செய்தது பழனிச்சாமி தான் உறுதிப்படுத்திய பொலிசார் அவரை தேடி வருகிறார்கள்.