Loading...
பிரான்சில் வசித்து வந்த இலங்கை தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி வட்டக்கச்சியைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா சசீஸ்குமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் தொடருந்துக்காக காத்திருந்த போது தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Loading...
எனினும், தொடருந்திலிருந்து தள்ளி விடப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்த விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த மரணம் விபத்தா..? அல்லது கொலையா என்பது குறித்து நாளை அந்நாட்டு பொலிஸார் அறிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...